புதுசா யோசிக்கிறாங்களாமாம்!

புதுசா யோசிக்கிறாங்களாமாம்!

செய்திகள் 3-Jul-2013 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரே பேருக்கு ரெண்டு பேர் சண்டை போடுறது சமீபகாலமா தமிழ்சினிமாவுல நிறைய நடக்குது. ‘துப்பாக்கி’க்கு ரெண்டு பேர் சண்டை போட்டு ஒண்ணு ‘கள்ளத்துப்பாக்கி’ ஆனதுனா, ‘வாலு’க்கும் சண்டை வந்து அதுல ஒண்ணு ‘ரெட்ட வாலு’னு மாறியது சமீபத்திய உதாரணங்கள்.

இப்படி புதுசா பேரு வச்சு, அதுக்கு சண்டை போடுறதுக்குப் பதிலா பழைய ‘ஹிட்’ படங்களோட பேரை வச்சுற வேண்டியதுதான்னு பல படங்கள் ‘பழைய பெயர்’களோட வர ஆரம்பிச்சது. ‘பழைய படத்தோட பேர வைக்கணும்’னா எங்ககிட்ட அனுமதி வாங்கணும்னு படத்தோட உரிமையாளர்கள் கோர்ட்டுக்குப்போக அதுலயும் பிரச்சனை வர ஆரம்பிச்சது.

என்னடா பண்றதுன்னு யோசிச்ச ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத் தயாரிப்பாளர் எஸ்.வி.தங்கராஜ், தான் இயக்கி தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிற அடுத்த படத்துக்கு ‘மேட்டார் சுந்தரம் பிள்ளை’ன்னு பேர் வச்சிருக்காரு. ‘அதான், ஏற்கெனவே சிவாஜி, சிவகுமார், ஜெயலலிதா நடிச்ச பழைய படம் ஒண்ணு இருக்கேன்’னு யோசிக்கிறீங்களா...? அந்தப் படத்தோட பேருதான் வச்சிருக்காரு... ஆனா அதில்லையாம். எப்படின்னு கேட்கிறீங்களா? மோட்டாரைத் தூக்கி பின்னாடி போட்டு ‘சுந்தரம் பிள்ளை மோட்டார்’னு படத்துக்குப் பேரு வச்சுட்டாராம்.

இப்ப என்ன பண்ணுவீங்க? (ஆனா, இந்த டெக்னிக்க ஏற்கெனவே நம்ம நாமக்கல் எம்.ஜி.ஆர். தன்னோட ‘வாலிபன் சுற்றும் உலகம்’ படத்துலேயே பயன்படுத்திட்டாரே!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - லவ் என்றவன் பாடல் வீடியோ


;