மீண்டும் ப்ரீத்தி ஜிந்தா!

 மீண்டும் ப்ரீத்தி ஜிந்தா!

செய்திகள் 3-Jul-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் நடித்த ப்ரீத்தி ஜிந்தா சமீபகாலமாக நடித்த பல ஹிந்தி படங்களும் பாக்ஸ் ஆபீசில் படு தோல்வியுற, சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? என்பதற்கு ஏற்றவாறு அம்மணி மீண்டும் ‘ஹாப்பி என்டிங்’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் சயிஃப் அலிகான், இலியானா ஜோடியாக நடிக்க, இரண்டாவது கதாநாயகி போன்ற வேடத்தில் ப்ரீத்தி நடிக்கிறார். இந்த படத்தை ராஜ் – கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். இந்த படத்தில் கோவிந்தாவும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க, இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;