விஜய்க்குக் கிடைத்த 2 மில்லியன்!

விஜய்க்குக் கிடைத்த 2 மில்லியன்!

செய்திகள் 3-Jul-2013 9:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் எந்த நடிகரின் படம் எத்தனை நாள் ஓடுகிறது என்பதில்தான் போட்டியே இருக்கும். 50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளி விழா படம் என ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழ். எந்தப் படத்தின் டிரைலரை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதுதான் தற்போதைய இணையதள டிரன்ட்.

விஜய் பிறந்தநாளில் வெளியான ‘தலைவா’ பட டிரைலர் வெளியான மூன்று நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைய, அப்போதிருந்தே ‘தல’ பட சாதனையை ‘தலைவா’ முறியடிக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் ஆவலாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் நிகழ்த்திவிட்டது இளையதளபதியின் ‘தலைவா’ பட டிரைலர். 10 நாட்களில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ள டிரைலரை இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் ‘யு டியூப்’ ரெக்கார்டுகளைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை ஒரு சாதனைதான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;