சன்னி லியோனுடன் பரத்!

ஹிந்தி படத்தில் பரத்!

செய்திகள் 2-Jul-2013 4:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் பரத், ரொம்பவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிற படம் ‘ஐந்து ஐந்து ஐந்து’. சிக்ஸ் பேக், அதிரடி ஆக்ஷன் என கடுமையாக உழைத்து நடித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிற நிலையில் பரத்துக்கு ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் ‘ஜாக்பாட்’. இப்படத்தை கைசாத் குஸ்தாத் என்பவர் இயக்குகிறார்.

இதில் பரத்துக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க, இவர்களுடன் நஸ்ருதீன் ஷா, சச்சின் தோஷி ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘ரன்ஜனா’ படம் மூலம் பாலிவுட்டில் களம் இறங்கி ஜெயித்து விட்ட தனுஷை தொடர்ந்து இப்போது பரத் பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார். பாலிவுட்டில் பரத் ‘ஜாக்பாட்’ அடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;