நடிகர் சூர்யா ரூ: 10 லட்சம் உதவி!

நடிகர் சூர்யா ரூ: 10 லட்சம் உதவி!

செய்திகள் 2-Jul-2013 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் தங்களது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ சார்பில் பிளஸ் டூ பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பரிசு வழ்ங்கி கல்விக்கு உதவி செய்தார்கள். இதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்காகவும் நடிகர் சூர்யா ரூபாய் .10 லட்சம் வழங்கி உதவி செய்திருக்கிறார். இதற்கான காசோலையை அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி சூர்யா கூறும்போது,
‘‘உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ள சேதத்தால் பேரழிவு நடந்து இருக்கிறது. நமது ராணுவத்தினர் திறமையாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பேரழிவினால், உத்தரகாண்ட் மாநிலம் நான்கு ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெள்ள சேதத்துக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கி இருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;