’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இசை எப்போது?

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இசை எப்போது?

செய்திகள் 2-Jul-2013 12:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ பேனரில் மதன் தயாரித்து வரும் படம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் விறுவிறுப்பாக நடந்து, இன்றுடன் நிறைவடைகிறது. சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தினை பொன்ராம் இயக்கியிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 14-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களில் பட்டையை கிளப்பிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;