ஹிந்தியில், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் கை கோர்க்கும் முருகதாஸ்!

ஹிந்தியில், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் கை கோர்க்கும் முருகதாஸ்!

செய்திகள் 1-Jul-2013 5:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’ படங்களை தொடர்ந்து தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இதுவரை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’வுடன் இணைந்து வேறு இயக்குனர்களை இயக்க வைத்து படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிப்பில் ஒரு ஹிந்தி படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது ‘துப்பாக்கி’ ஹிந்தி படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும், அதாவது 2014-ல் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் ஹிந்தி படத்தை இயக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டீஸர்


;