‘ஜெயம்’ ரவியுடன் மோதும் 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர்!

 ‘ஜெயம்’ ரவியுடன் மோதும் 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர்!

செய்திகள் 1-Jul-2013 4:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆதிபகவன்’ படத்தைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி ‘பூலோகம்’ மற்றும் ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘பூலோகம்’ படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வர, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட சென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர் நேதன் பிரீன்டன் ஜோன்ஸ் சென்னை வருகிறார்.

இவர் ஜாக்கிசானுடன் ‘போலீஸ் ஸ்டோரி 4’, டோனி ஜாவுடன் ‘ தூம் யூம் கோங்’ ஜெட்லியுடன் ‘பியர்லெஸ்’ ஆகிய படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஆவார். ’பூலோகம்’ படத்தில் ‘ ஜெயம்’ ரவியுடன் மோதும் ஒரு சண்டை காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.

இவரும், ‘ஜெயம்’ ரவியும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டை போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், ரூ.3 கோடி செலவில் மிக பிரமாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு–பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். ‘ ஜெயம்’ ரவியும், ஹாலிவுட் நடிகரும் மோதும் சண்டை காட்சியை, ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;