அமெரிக்க தொழில்நுட்பத்தில் ‘ஃபோர் ஃபிரேம்ஸ்’ ப்ரிவியூ தியேட்டர்!

அமெரிக்க தொழில்நுட்பத்தில் ‘ஃபோர் ஃபிரேம்ஸ்’ ப்ரிவியூ தியேட்டர்!

செய்திகள் 1-Jul-2013 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கு சொந்தமான ‘ஃபோர் ஃபிரேம்ஸ்’ ப்ரிவியூ தியேட்டர் இயங்கி வருகிறது. திரைப்படங்களின் பிரஸ் ஷோ, பிரீமியர் ஷோ போன்றவற்றிற்கு மிகவும் பெயர்போன இந்த பிரிவியூ தியேட்டரில்தான் கலைஞர் கருணாநிதி, சூப்பர்ஸ்டார் ரஜினி உட்பட தமிழ்த்திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் பிரத்யேகக் காட்சிகளைப் பார்ப்பார்கள். தற்போது இது அமெரிக்க மற்றும் துபாய் நாட்டு தொழில்நுட்பத்தில் புதுபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தியேட்டரின் நிர்வாகி கல்யாணம் கூறும் போது...
‘‘சுமார் 1 கோடி ரூபாய் செலவில் ‘ஃபோர் பிரேம்ஸ்’ தியேட்டர் வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இருக்கைகள் படம் பார்க்கும்போது புது அனுபவத்தையும் சௌகரியத்தையும் கொடுக்கும். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ‘வெள்ளித்திரை’ மற்றும் கியூப் தொழில்நுட்பத்தில் 2கே, பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் படத்தின் தரத்தைக் குறைக்காமல் ஒலி, ஒளி மிகச்சரியான முறையில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். பிரிவியூ தியேட்டர்களில் 2கே தொழில்நுட்பம் கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் இது மட்டுமே’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;