‘தல’யா? ‘தளபதி’யா? கவுன்டவுன் ஸ்டார்ட்!

‘தல’யா? ‘தளபதி’யா? கவுன்டவுன் ஸ்டார்ட்!

செய்திகள் 1-Jul-2013 10:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வழக்கமாக அஜித் படமும், விஜய் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் சமயம்தான் ரசிகர்களுக்கிடையே, ‘தல படம்தான் ஜெயிக்கும்’, ‘தளபதி படம்தான் மாஸ் ஹிட்டாகும்’னு பரபர போட்டி இருக்கும். ஆனால், தற்போது அஜித் பிறந்தநாளில் வெளியான ‘தல’யின் 53 பட டிரைலருக்கும், விஜய் பிறந்தநாளில் வெளியான ‘தலைவா’ பட டிரைலருக்கும்தான் இணையதளத்தில் போட்டியே.

அஜித் பட டிரைலர் வெளியாகி ஒரே வாரத்திலேயே தமிழ் சினிமாவின் ‘யு டியூப்’ ரெக்கார்டுகளையெல்லாம் பிரேக் செய்தது. அந்த வெற்றியை எப்படியும் முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்து ‘தலைவா’ படத்தின் டிரைலரை 3 நாட்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றார்கள்.

தற்போதைய நிலவரப்படி, ‘தல’ பட டிரைலர் 19,71,484 பார்வையாளர்களோடும், ‘தலைவா’ பட டிரைலர் 19,56,634 பார்வையாளர்களோடும் சென்று கொண்டிருக்கிறது. அனேகமாக ‘தல’ பட டிரைலரை ‘தலைவா’ பட டிரைலர் விரைவிலேயே முந்திவிடும் நிலையில் உள்ளது.

இதற்கிடையில் யாருடைய பட டிரைலர் முதலில் 2 மில்லியன் பார்வையாளர்களைத் தொடும் என அஜித் ரசிகர்களுக்கிடையேயும், விஜய் ரசிகர்களுக்கிடையேயும் தற்போது இணைய யுத்தமே நடந்து வருகிறது.

சபாஷ் சரியான போட்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;