‘அன்னக்கொடி’ பாரதிராஜா அறிக்கை!

 ‘அன்னக்கொடி’ பாரதிராஜா அறிக்கை!

செய்திகள் 1-Jul-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அண்மையில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் 'அன்னக்கொடி'. பாராதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை கண்டித்தும், படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்று காலை தேனியில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட வந்தனர்.

இது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்தவுடன் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாரதிராஜா வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

இது குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

என் இனிய தமிழ் மக்களே….
"மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என் மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டு பிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.

நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம்.

"ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே "கோவலனை கொண்டு வா" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, " கொன்று வா" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு. எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோலிவை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி.

முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் "அன்னக்கொடி" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் "அன்னக்கொடி" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.

சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்".எனறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோ 2 - மோஷன் போஸ்டர்


;