DESPICABLE ME 2 - அனிமேஷன் 3டி பட முன்னோட்டம்

DESPICABLE ME 2  - அனிமேஷன் 3டி பட முன்னோட்டம்

செய்திகள் 29-Jun-2013 5:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3200 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடிய ‘டிஸ்பிக்கபிள் மீ’ அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த 2010ல் வெளிவந்த ‘டிஸ்பிக்கபிள் மீ’ முதல் பாகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரவே, அப்போதே இரண்டாம் பாகத்திற்கான வேலையையும் துவங்கிவிட்டார்கள் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இதுவரை வெளியான அனிமேஷன் படங்களில் மிகப்பெரிய 10 அனிமேஷன் படங்களின் பட்டியலில் இந்த ‘Despicable Me’ படத்திற்கும் இடமுண்டு.

செர்ஜியோ பப்லோஸ், ஸின்கோ பால் மற்றும் கென் டாரியோ ஆகியோரின் கைவண்ணத்தில்தான் இப்படத்தின் அனிமேஷன் கேரக்டர்கள் உயிர்பெற்றன. இப்படத்தின் முக்கிய கேரக்டர்கள் ‘க்ரு’ மற்றும் மினியன் படை. சூப்பர் வில்லனான க்ரு தன் மினியன் படைகளை வைத்துக்கொண்டு வாஷிங்டன் நகரத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். ஒரு நாள் அவரிடம் மூன்று அனாதைக் குழந்தைகள் வந்து சேர்கின்றன. ‘க்ரு’வை எப்படியும் வீழ்த்த வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் மெயின் வில்லனிடமிருந்து அந்த மூன்று குழந்தைகளையும் தன்னையும் எப்படிக் காத்துக் கொள்கிறார் என்பதே ‘Despicable Me’ முதல் பாகத்தின் கதை.

முதல் பாகத்தில் தன் வில்லத்தனத்தைக் காட்டிய ‘க்ரு’ இந்த இரண்டாம் மேலும் சில சுவாரஸ்யமான வேலைகளையும் செய்கிறார். மார்கோ, எடித், ஆக்னெஸ் ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் செல்லமாக வளர்த்து வருகிறார் க்ரு. அதில் கடைக்குட்டியான ஆக்னெஸிற்கு க்ரு செய்யும் ரகசிய வேலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

இந்நிலையில் ‘எல் மாக்கோ’ என்ற பயங்கர வில்லனைப் பிடிப்பதற்காக, ‘க்ரு’வின் உதவியதை நாடுகிறது இரகசிய காவல்துறை. அதற்காக லூஸி என்ற ரகசிய பெண் உளவாளியோடு ‘க்ரு’வை வேலை செய்ய வைக்கிறார்கள். தன் பிள்ளைகளைக் கவனிக்கவும், தொழிலைச் செய்வதற்குமே நேரமில்லாமல் பறந்துகொண்டிருக்கும் ‘க்ரு’ இந்த வேலையை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதே ‘Despicable Me 2' படத்தின் காமெடி கலாட்டா.

உலகமெங்கும் வரும் ஜூலை 3ல் வெளியாகும் இப்படம், இந்தியாவில் ஜூலை 5ல் வெளிவருகிறது. இப்படத்தை ஹன்ஸா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;