கால்ஷீட்டில் சொதப்புகிறாரா நஸ்ரியா?

கால்ஷீட்டில் சொதப்புகிறாரா நஸ்ரியா?

செய்திகள் 29-Jun-2013 3:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நேரம்’ படத்தின் நாயகி நஸ்ரியாவுக்கு நல்ல நேரமாக இருப்பதால் அம்மணி தற்போது தனுஷுடன் ‘நையாண்டி’, ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி’ ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என பல படங்களில் ஒய்வில்லாமல் நடித்து வருகிறார். ஆனால் அம்மணி மீது கோடம்பாக்கத்தில் புகார்களும் கிளம்பியவண்ணம் உள்ளன.

அதாவது இவர், ‘ ராஜா ராணி’ படத்துக்கும், ‘நையாண்டி’ படத்துக்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றும், இதனால் எந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்வது என்று தெரியாமல் சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்றும், இரண்டு படங்களும் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படம் என்பதால் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று அடுத்தவரை அவமதிக்கக் கூடாது என்பதற்காக அம்மணி ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றதால் இரண்டு படக்குழுவினரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியிருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இது குறித்து நஸ்ரியாவிடமே கேட்போம் என்று நாம் அவரை மொபைலில் தொடர்பு கொள்ள, ஃபோனை எடுத்த அவரது தந்தை நசீம், ‘’நாங்க ‘நையாண்டி’ படப்பிடிப்புக்காக கும்பகோணம் புறப்பட்டுக்கிட்டிருக்கோம், நஸ்ரியா எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை, அப்படியிருக்க எதுக்கு ஹைதராபாத் போறோம்? என்று நம்மிடம் எதிர் கேள்வி எழுப்பி, நஸ்ரியா கால்ஷீட்டில் சொதப்பவில்லை என்று தெளிவுப்படுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;