"சூர்யா, விக்ரமுக்கு பாலான்னா எனக்கு ராகவா" - ஷக்தி

"சூர்யா, விக்ரமுக்கு பாலான்னா எனக்கு  ராகவா" - ஷக்தி

செய்திகள் 29-Jun-2013 3:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ஆப்பிள் பிளாசம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக எச்.டி.நாராயணபாபு, பூர்ணிமா நாராயாணன், வாசன். எஸ்.எஸ் தயாரிப்பில் 'பை2' படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் ஷக்தி,பூர்ணா நடிக்கும் படம் 'படம் பேசும் ' இப்படம் சுமார் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில்,
‘'இந்தப் படத்தின் கதையம்சம் இந்திய மொழி படங்களில் வராத ஒன்று' என்றார் தயாரிப்பாளர் எச்.டி.நாராயண பாபு. அதை தொடர்ந்து ஹீரோ ஷக்தி பேசும்போது, ‘'சூர்யா, விக்ரமுக்கு எப்படி ஒரு பாலா கிடைச்சாரோ, கார்த்திக்கு எப்படி ஒரு அமீர் கிடைச்சாரோ அதே போல எனக்கு டைரக்டர் ராகவா கிடைச்சிருக்கார். இந்தப் படம் எனக்கு அஸ்திவாரம் மட்டுமில்லாம, இது ஒரு டிரென்ட் செட்டிங் படமாவும் இருக்கும். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்குப் பிறகு அஜாக்கிரதையாலும், விட்டுகொடுத்ததாலும் நான் நொந்து போனேன். மீண்டும் ஒரு தனி இடம் கிடைக்க இந்தப் படம் வழிவகுத்து கொடுத்துள்ளது. இப்படத்திற்கு பிறகு படங்களை ரொம்பவும் ஜாக்கிரதையாக தேர்ந்தெடுத்து நடிப்பேன்’’ என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய பூர்ணா,
‘'இதுவரை ஆறு படங்கள் நடித்துவிட்டேன். ஒன்று கூட சரியாக ஓடவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். எனக்கு பெயர் கிடைக்கும். இந்தப் படத்தின் ஒரு ஸ்டில்லே எனக்கு பெயரை வாங்கி கொடுத்துள்ளது. இப்படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நான் நடித்த படங்களிலேயே இது பெஸ்ட் படமாக இருக்கும்.

இது இரண்டு நாயகிகள் கதை. கதையை கேட்டவுடன் முதல் கதாநாயகி கேரக்டர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் எனக்கு இரண்டாவது நாயககி கேரக்டர் தான் கிடைத்தது. மனசுக்குள் ஒரு ஏக்கம். அந்த மெயின் கேரக்டர் கிடைக்காதான்னு…. ஒரு வாரம் கழிச்சு டைரக்டர் நான் ஆசைப்பட்ட மாதிரியே மெயின் கேரக்டரிலேயே நடிக்க சொன்னார். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது நல்ல கதைகளம் கொண்ட படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ


;