கட்டிப் பிடிக்கவில்லை…. முத்தம் கொடுக்கவில்லை….

கட்டிப் பிடிக்கவில்லை….  முத்தம் கொடுக்கவில்லை….

செய்திகள் 29-Jun-2013 1:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் வசந்த் நாயகனாக நடிக்க, 'ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ்' பேனரில் விஜய் வசந்தின் தம்பி வி. வினோத் குமார் தயாரிக்கும் படம் 'தெரியாம உன்ன காதலிச்சிட்டேன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல் சிடியை இயக்குனர் லிங்குசாமி வெளியிட, விஜய் வசந்தின் நண்பர்களான ‘மிர்ச்சி’ ஷிவா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

படம் பற்றி இயக்குநர் கே.ராமு கூறியபோது,
"காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆண், பெண் இருவருமே ஒரு கால கட்டத்தில் தெரியாத்தனமா உன்ன காதலிச்சிட்டேன் என சொல்லும் சூழல் தான் படத்தின் கதை. படத்தில் கதாநாயகனும் நாயகியும் கட்டிப் பிடிக்கவில்லை. முத்தம் கொடுக்கவில்லை. இதில் வரும் காதல் கண்ணியமானது. இது பெற்றோர்களுக்கான படம். காதலிக்கும் இளைஞர்களுக்குமான படமும் கூட! முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறோம்."என்றார்.

விஜய் வசந்த் பேசும்போது
"எனது தம்பி தயாரிப்பில் நடிக்கிறேன். அடுத்து ஒரு படம் தயாரிக்க, அதிலும் நான் தான் நடிக்கிறேன். மற்ற கம்பெனி படங்கள் ஏதாவது சாக்கு சொல்லிட்டு இருந்துக்கலாம். சொந்த கம்பெனி படம்ங்கிறதால சாக்கு சொல்ல முடியல. ஏதாவது ரிஸ்க்கான காட்சியா இருந்தாக்கூட விட மாட்டேங்கிறான். போயி நடின்னு ஓய்வின்றி வேலை வாங்கி பிழிஞ்சுறாங்க என்றார்" தமாஷாக!

கேரள வரவான கதாநாயகி ரஸ்னா பேசும்போது,
"ஷூட்டிங் பார்க்க வர்றவங்க, நண்பர்கள்.. என்ன படம்னு கேட்கிறப்போ, ’தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்'னு சொல்லும்போது அவங்க ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டு சுதாரிப்பாங்க. அவங்க முகம் வெட்கத்துல மாறும். இதுமாதிரி யாராவது ஒருத்தர் தினமும் மாட்டுவாங்க" என்றார்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசும்போது..
"முதல் தயாரிப்புன்றதால ஒரு சிலர் உதவியுடன் தயாரிப்பில் இறங்கினேன். நல்லா போயிட்டிருந்தது. கொடைக்கானல்ல அவுட்டோர் ஷூட்டிங். செலவு பில்ல பார்த்தபோது ஒரு ஷாக்! தயாரிப்புல ரொம்ப கஷ்டமான வேலையே அவுட்டோர் ஷூட்டிங் தான். ஆனா, படத்தை பார்த்தப்ப திருப்தி" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;