ஹாலிவுட்டில் தயாரான 'கல்யாண சமையல் சாதம்'

ஹாலிவுட்டில் தயாரான 'கல்யாண  சமையல் சாதம்'

செய்திகள் 29-Jun-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிக்க, அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தை எவ்ரெஸ்ட் என்டெர்டெயின்மென்ட் சார்பில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ இயக்குனர் அருண் வைத்தியநாதன், ஆனந்த் கோவிந்தன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். காதலிக்கும் இளைஞர்களுடைய பெற்றோர்களின் தவிப்பை தமாஷாக சொல்லும் இப்படத்தின் சவுண்ட் மிக்சிங் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

சவுண்ட் மிக்சிங் மேற்பார்வையாளராக 'விஸ்வரூபம்' படத்தில் பணியாற்றிய குணால் ராஜன் பணிபுரிந்தார். இவருடன் சேர்ந்து டாம் மார்க்ஸ், புருஷ்நிஸ்னிக், ஹேரி ஆகியோர்கள் பணிபுரிய, படத்தினை பார்த்த இவர்களுக்கு மொழி புரியவில்லை என்றாலும், படதின் நகைசுவைக் காட்சிகளை ரசித்ததுடன் இந்தியர்களின் திருமண கலாச்சாரத்தை தெரிந்து கொண்டோம் என்று கூறி மகிழ்ந்தார்களாம்.

இதனை தெரிவித்த படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா, படத்தின் இசை வெளியீடு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்யாண சமையல் சாதம் - பல்லு போன ராஜா


;