ஆக்ஷனில் கலக்கும் டாப்சி!

ஆக்ஷனில் கலக்கும் டாப்சி!

செய்திகள் 29-Jun-2013 11:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காஞ்சனா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் படம் ‘முனி 3 கங்கா’. இப்படத்திலும் ராகவா லாரன்ஸே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக டாப்சி, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். கோவை சரளா முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். ‘முனி’, ‘காஞ்சனா’ படங்களை விட மிரட்டும் திகில் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என டார்கெட் வைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வரும் இப்படத்தில் டாப்சி தண்ணீருக்கு அடியிலும், கயிற்றில் தொங்கியவாறும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடித்து, தூள் கிளப்பி படப்பிடிப்பு குழுவினரையே வியக்க வைத்திருக்கிறாராம்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆக்‌ஷன் ஹீரோயின் கிடைத்து விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;