‘‘புதுப் பசங்க மிரட்டிட்டாங்க!’’ - தம்பி ராமையா

‘‘புதுப் பசங்க மிரட்டிட்டாங்க!’’ - தம்பி ராமையா

செய்திகள் 29-Jun-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆஷிக் இயக்கத்தில் தம்பி ராமையா உட்பட புதுமுகங்கள் பலர் நடித்திருக்கும் 'உ' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் சங்கத்தலைவர் இயக்குனர் விக்ரமன் இப்படத்தின் பாடல்களை வெளியிட, அதை ‘யுடிவி’ தனஞ்செயன் பெற்றுக்கொண்டார்.

அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் ராமசாமியின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை பத்திரிகையாளர் முருகன் மந்திரம் எழுதியுள்ளார். விழாவின் ஒருபகுதியாக டிரைலர் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு ‘உ’ படக்குழுவினரை வாழ்த்தினர். பாடல்களையும் டிரைலரையும் பார்த்த தனஞ்செயன், விக்ரமன், எஸ்.எஸ்.குமரன், பி.எல்.தேனப்பன் ஆகியோர். ‘‘இந்தப் படம் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும் மற்றும் நேரம் ஆகிய படங்களைப் போல இளைஞர்களைக் கவரும்’’ என்றார்கள்.

நடிகர் தம்பி ராமையா, பேசியபோது ‘‘சும்மாதான் கதை கேட்க ஆரம்பித்தேன்... பயலுக மிரட்டிட்டாங்க... என்னைப் பாட வைத்து ஆட வைத்து அமர்க்களப்படுத்திட்டாங்க. இந்த இளைஞர்கள் தமிழ்சினிமால நிச்சயம் சாதிப்பாங்க’’ என்றார்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசியபோது, “பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்தேன். சினிமா பத்திரிககையாளராக தொடங்கிய எனது வாழ்க்கையில் இன்று சினிமாவில் பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பி ராமையாவும், விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பட்டம் வென்ற ஆஜித்தும் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள் என்பதும் எனக்குப் பெருமையாக உள்ளது’’ என ரொம்ப நெகிழ்ந்தார்.

தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ஆஜித், மதுமிதா, ஸ்மைல் செல்வா, மதன்கோபால், சத்யா, கார்த்திக், தீபராஜ், வருண், நேகா, காளி, சக்கரவர்த்தி செல்வன், வெங்கி மற்றும் நெல்லை சிவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;