விஜய் ஹீரோயினுக்கு திருமணம்!

விஜய் ஹீரோயினுக்கு திருமணம்!

செய்திகள் 29-Jun-2013 1:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காவலன்’ படத்தில் கதாநாயகி அசினுக்கு ஃப்ரெண்டாக தோன்றி, அசின் காதலிக்கும் விஜய்யை திருமணம் செய்து கதையில் திருப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்த மித்ரா குரியன் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். கேரளாவை சேர்ந்த கீ போர்டு இசை கலைஞரான வில்லியம் ஃப்ரான்சிஸுக்கும், மித்ராவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு, கடந்த ஒரு வருடமாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்களாம்.

இந்திலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, இவர்களது திருமணம் விரைவில் கேரளாவில் நடைபெறவிருக்கிறது. ஏராளமான மலையாள படங்களில் நடித்த மித்ரா குரியன் தமிழில் ‘காவலன்’ தவிர ‘சூரியன் சட்ட கல்லூரி’, ‘சாதுமிரண்டா’, ‘கந்தா’ போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

இருவருக்கும், ‘டாப் 10 சினிமா’ தனது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;