அன்னக்கொடி விமர்சனம்

கிராமத்துப் புழுதிக்காட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் பாரதிராஜா!

விமர்சனம் 28-Jun-2013 5:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

முதலில் பார்த்திபன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றார்கள். அடுத்த சில நாட்களிலேயே ‘‘பார்திபன் இல்லை... அமீர்தான் இந்தக் கேரக்டருக்கு சரியானவன்’’ என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வாசித்தார். அமீர் நாயகன், இனியா, கார்த்திகா ஆகியோர் நாயகிகள் என படத்தை வேக வேகமாக ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாட்களிலேயே ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தை இரண்டாகப் பிரிக்கிறோம். ‘கொடிவீரன்’ கதையை தனியாக படம் செய்ய இருக்கிறோம் என அறிவித்துவிட்டு, அமீரையும் இனியாவையும் படத்திலிருந்து தூக்கினார்கள். அதன்பின்பு புதுமுகம் லக்ஷ்மன் நாராயண் நாயகன், கார்த்திகா நாயகி என முடிவுசெய்யப்பட்டு ‘அன்னக்கொடி’ என பெயர் மாற்றி ஒருவழியாக படத்தையும் எடுத்து முடித்துவிட்டார்கள். ரிலீஸாகும் நேரத்திலும் யாரோ ஒருவர் ‘தடைகோரி’ வழக்குத் தொடர நல்லவேளையாக கோர்ட் அதை தள்ளுபடி செய்தது.

இத்தனை களேபரங்களையும் கடந்து இன்று வெளியாகியிருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது...?

வழக்கம்போல் அதே பாரதிராஜா என்ட்ரி... ‘‘நான் உங்கள் பாரதிராஜா பேசுகிறேன்’’ என்றபடியே திரையில் தோன்றுகிறார். காரியா பட்டி, ஊரல் பட்டி, கிடாய் பட்டி என மூன்று குக்கிராமங்களுக்கிடையே­­­ பயணிக்கும் கதைதான் ‘அன்னக்கொடி’. கொடிவீரன், அன்னக்கொடி, சங்குனி, சடையன் இவங்கதான் இந்தப் படத்தோட முக்கியமான கேரக்டர்கள்.

ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களை ஏமாற்றி உடம்பு வளர்க்கும் கொடூர வில்லன் சங்குனி. சங்குனியோட மகன் சடையன் (இவர்தான் மெயின் வில்லன்). ஆடுமேய்க்கும் கொடிவீரனுக்கும், அடுத்த ஊரு அன்னக்கொடிக்கும் காதல். அன்னக்கொடியின் அம்மாவிடம் வட்டிப் பணம் வசூலிக்கும் வரும் சடையன், அன்னக்கொடியைப் பார்க்க இவருக்கும் அன்னக்கொடி மேல் ‘அது’ (?) வருகிறது. ‘இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கே தெரியும்’ என நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்.

கொடிவீரனாக புதுமுகம் லக்ஷ்மன், அன்னக்கொடியாக கார்த்திகா, சடையனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். லக்ஷ்மனுக்கு ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’. கார்த்திகா, பாவம். படம் முழுவதும் ‘‘வெடக்கோழி கொழம்புதான்... வெளைஞ்ச கம்பங் கூழுதான்... சஞ்சனக்கான் ஜனக்குத்தான்... இது சடையன் போட்ட கணக்குத்தான்!’’ என்ற ஒரு வசனத்தையே திரும்பத் திரும்பப் பேசி போரடிக்கிறார் மனோஜ்.

பின்னணிக்கு சபேஷ் முரளி. பாடலுக்கு மட்டும் ஜீ.வி. கேமரா, வழக்கம்போல் பாரதிராஜாவின் படங்களைப் பார்த்ததுபோல் இருக்கிறது.

புதுப் புது இயக்குனர்கள் வந்து தமிழ்சினிமாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கும் இந்தவேளையில், கிராமத்துப் புழுதிக்காட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் பாரதிராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;