ரீ-மேக் ஆகும் மன்மதலீலை!

ரீ-மேக் ஆகும் மன்மதலீலை!

செய்திகள் 28-Jun-2013 5:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இது, ரீ-மேக் சீஸன் போலும்! 'தில்லு முல்லு' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய, 'மன்மதலீலை' படத்தையும் ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியாகிய ‘தில்லு முல்லு’ படம் பழைய ‘தில்லு முல்லு’ மாதிரி இல்லையென்றாலும் படம் ஒரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரியே ‘மன்மத லீலை’ படத்தையும் ரீ-மேக் செய்து இயக்க இருக்கிறார்.

பாலசந்தர் இயக்கிய, ‘மனமத லீலை’ படத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா ஜோடியாக நடித்திருந்தார்கள். இந்த வேடங்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக பரிசீலித்து வருகிறாராம் பத்ரி. ‘தில்லு முல்லு’ படத்தின் கதை மாதிரி ‘மன்மத லீலை’ படத்தின் கதையும் எந்த காலத்துக்கும் பொருந்தும் என்பதால் தான் அதை ரீ-மேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்.

ஒரிஜினல் மாதிரி காப்பி இருக்காது என்பதை ‘தில்லு முல்லு’ உணர்த்தியது. ‘மன்மத லீலை’ எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம்ம போத ஆகாதே சிங்கள் ட்ராக்


;