ஹாலிவுட்டுக்குச் செல்லும் நீத்து சந்திரா!

ஹாலிவுட்டுக்குச் செல்லும் நீத்து சந்திரா!

செய்திகள் 28-Jun-2013 1:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சேட்டை’, ‘ஆதிபகவன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்த நீத்து சந்திரா, பல தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்தவர். இவர் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘ஜுமான்ஜி’, ’ஜுராசிக் பார்க் 3’ போன்ற பல படங்களை இயக்கியவர் ஜோ ஜோஸ்டன். இவர், நீத்து நடித்த ஒரு படத்தை பார்த்திருக்கிறார். அதில், நீத்துவின் பெர்ஃபார்மென்ஸ் அவருக்கு ரொம்பவும் பிடித்து போக, தான் அடுத்து இயக்கவிருக்கும் ஆங்கில படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்.

தற்போது ‘ஷூட்டர்’, ‘குசார் பிரசாத் கா பூட்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வரும் நீத்து சந்திரா, ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனது உடம்பை இன்னும் கொஞ்சம் ‘ஸ்லிம்’ ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். ஆக, ஹாலிவுட்டிலும் கிளாமரில் கலக்க இருக்கிறார் நீத்து சந்திரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வைகை எக்ஸ்பிரஸ் - டிரைலர்


;