சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து மெகா ஸ்டாரை இயக்கும் சித்திக்!

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து மெகா ஸ்டாரை இயக்கும் சித்திக்!

செய்திகள் 28-Jun-2013 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களையும் இயக்கியவர் சித்திக். தமிழில் ‘ஃபெரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ போன்ற படங்களை இயக்கிய சித்திக், சமீபத்தில் இயக்கிய மலையாள படம் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’. மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த இந்த படத்தைத் தொடர்ந்து, அடுத்து மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சித்திக்.

ஏற்கெனவே ‘ஹிட்லர்’, ‘குரோனிக் பேச்சிலர்’ போன்ற படங்களில் மம்முட்டியுடன் இணைந்த சித்திக் இப்போது ஒரு ஹிந்தி படத்தின் வேலைகளில் பிசியாகியிருக்க, இந்த படத்தை முடித்த கையோடு, மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை மம்முட்டி தயாரிக்கிறாராம். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெருச்சாழி - டிரைலர்


;