மீண்டும் ஹீரோவாகும் இயக்குனர்!

மீண்டும் ஹீரோவாகும் இயக்குனர்!

செய்திகள் 28-Jun-2013 11:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல படங்களை இயக்கி போரடித்து விட்டதால் ஹீரோவாக நடிக்கத் துவங்கி, பல வெற்றி படங்களைத் தந்தவர் சுந்தர்.சி. அதன் பிறகு இவருக்கு நடிப்பும் போரடித்து விட்டதோ என்னவோ நடிப்பை கொஞ்சம் ஒரம்கட்டி வைத்து, மீண்டும் படத்தை இயக்க, களத்தில் இறங்கி, டைரக்ட் செய்த படம் ‘கலகலப்பு’. இந்த படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்ப, உற்சாகமான சுந்தர்.சி. மீண்டும் இயக்கத்தில் ஈடுபட்டு இயக்கிய படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு'.

இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார் . ஆனால் இந்த படத்தை அவரே இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடிக்கப் போகிறாராம். சுந்தர்.சி. நடித்த பெரும்பாலான படங்களை வேறு இயக்குனர்கள் தான் இயக்கி இருந்தார்கள். ஆனால் அடுத்து தானே இயக்கி தானே கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘அரண்மனை’ என்று பெயர் வைத்திருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;