ஸ்லம்டாக்’ பொண்ணு இப்போ ஹீரோயின்!

ஸ்லம்டாக்’ பொண்ணு இப்போ ஹீரோயின்!

செய்திகள் 28-Jun-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கரை அள்ளிய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தன்வி கணேஷ் லோன்கர் ஏற்கெனவே ‘காதல் தீவு’ என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் நாகமானிசி இயக்கும் ‘சந்தித்தேன் உன்னை’ என்ற படத்தில் அமைச்சர் மகளாக நடிக்க ஒரு புதுமுகம் தேவைப்பட ‘ஸ்லம்டாக்’கின் தன்வியை அணுகியிருக்கிறார்கள். பொண்ணுக்கு இப்போ வயசு 18. அதனால் உடனே அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் ஒரு ரொமான்ஸ் த்ரில்லராம். ‘ஆஸ்கர்’ பட நாயகி நடித்த படம்னு விளம்பரம் பண்ணலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;