‘கிளியாந்தட்டு’ம் தோண்டி பாபுவும்!

 ‘கிளியாந்தட்டு’ம் தோண்டி பாபுவும்!

செய்திகள் 28-Jun-2013 10:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தூத்துக்குடி’, ‘பூவா தலையா’ போன்ற பல படங்களை இயக்கியதுடன் சில படங்களை தயாரித்தும் உள்ள டி.சஞ்சய் ராம் தற்போது ‘கிளியாந்தட்டு- தூத்துக்குடி 2’ படத்தில் கதை நாயகனாக நடித்து இயக்குகிறார். ‘23 செல்லுலாய்ட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தோண்டி பாபு என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் சஞ்சய் ராம். இன்னொரு நாயகனாக குகன் சக்ரவர்த்தி நடிக்கிறார். சஞ்சய்ராம் ஜோடியாக மஞ்சுளா நடிக்க, குகன் சக்ரவர்த்திக்கு ஜோடியாக அலினா ஷேக் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட நிஜ சம்பவத்தை பின்னணியாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். ராஜாமதி கணேஷ், எஸ்.கோபிநாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ரா.சக்தி சிவபாலன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ராம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;