இன்று என்ன படம் பார்க்கலாம்?

இன்று என்ன படம் பார்க்கலாம்?

செய்திகள் 28-Jun-2013 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

2008ல் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ படத்திற்குப் பின்னர், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘அன்னக்கொடி’ படம் இன்று வெளியாகிறது. புதுமுகம் லக்ஷ்மன் நாராயண், கார்த்திகா, மனோஜ் (பாரதிராஜாவின் மகன்) ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இப்படத்தை பாரதிராஜாவின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கிறார்களாம்.

‘‘கோலி... கில்லி... விளையாடுற பசங்ககூட சேரக்கூடாதுன்னு எங்க அப்பா அப்பவே சொன்னாரு...’’ என்ற விளம்பர வாசங்களோடு இன்று வெளியாகும் இன்னொரு தமிழ்ப் படம் ‘துள்ளி விளையாடு’. வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அடுத்தது, நம்ம தனுஷோட ‘ரான்ஜ்னா’ ஹிந்திப் படத்தின் தமிழ் வெர்ஷன் ‘அம்பிகாபதி’ படம். தனுஷ், சோனம் கபூரின் கெமிஸ்ட்ரி, ஏ.ஆர்.ரஹ்மானின் மனதை மயக்கும் பாடல்கள் என இப்படம் ஹிந்தியில் வெளியாகி ஏற்கெனவே தன்னை நிரூபித்துவிட்டதால், ‘அம்பிகாபதி’யை தமிழ் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்கிறார்களாம். ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் ‘ரான்ஜ்னா’ வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறதாம்.

பொதுவாக, தெலுங்குப் படத்திற்கு நம்ம ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், ரவிதேஜா நடிப்பில் இன்று வெளியாகும் ‘பலுபு’ படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்காம். இருக்காதே பின்னே, கவர்ச்சியில் கலங்கடிக்க ஸ்ருதிஹாசன், அசத்தல் நடிப்புக்கு அஞ்சலி என நம்ம கோடம்பாக்க நாயகிகளை களமிறக்கியிருக்கிறார்களே! கோபிசந்த் மாலிநேனி இயக்கியிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரித்திருக்கிறது.

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை இன்று ஒரே ஒரு படம்தான். சான்ட்ரா புல்லக், மெலிஸா நடித்திக்கும் ‘தி ஹீட்’ படம் மட்டுமே இன்று வெளியாகிறது.

அது சரிங்க நீங்க எந்தப் படத்துக்குப் போகப்போறீங்க..?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;