பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்துக்கு தடை?

பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்துக்கு தடை?

செய்திகள் 27-Jun-2013 12:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கியுள்ள, ‘அன்னக்கொடி’ படம் சம்பந்தமாக, மதுரை தேவர் பாசறையின் இயக்கத் தலைவர் ஏ.கே.ரகுபதி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ’மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, பாரதிராஜா இயக்கியுள்ள ‘ அன்னக்கொடி’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளஞன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உள்ள காட்சிகளும், வனங்களும் இரு சமூகத்தினரிடையே மோதலையும், மனகசப்பையும் ஏற்படுத்தி பொது அமைதி கெடும் வண்ணம் உள்ளன.

எனவே தென் மாவட்டங்களில் ‘அன்னக்கொடி’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை. எனவே ‘அன்னக்கொடி’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், "சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அரசு பார்த்துகொள்ளும். இதுபோன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு படத்துக்கும் தடை கோரினால் தடை விதிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியவர், இதற்கு சென்சார் போர்டு பதில் அளிப்பதற்காக விசாரணையை ஜூன் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;