இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாகிறது!

இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாகிறது!

செய்திகள் 26-Jun-2013 11:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கணேஷ் வெங்கட்ராம் நடித்த, ’பனித்துளி’ படத்தை இயக்கிய நட்டிகுமார் தற்போது தனது நீண்ட நாள் கனவான இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க உள்ளாராம். ‘’உலகத்தலைவர்கள் பலரால் பெரிதும் பாரட்டபட்ட இந்தியாவின் இரும்பு பெண்மணியாக வலம் வந்தவர் இந்திராகாந்தி. இவரின் வாழ்க்கயை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது பெரும் கனவாக இருந்தது. தற்போது அது நிஜமாகப் போகிறது’’ என்கிறார் நட்டிகுமார்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு மும்மரமாக நடந்து வருகிறது. ‘’அநேகமாக படத்திற்கு IRON LADY INDHIRA GANDHI என்றே பெயர் வைப்பேன். இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக நான் நினைப்பது ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவைத்தான். காலம் கனிந்தால், எல்லாம் நன்றாக நடக்கும்’’ என்கிறார் நட்டிகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;