ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி திருமணம்!

ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி திருமணம்!

செய்திகள் 25-Jun-2013 1:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், தொடர்ந்து ‘கிரீடம்’, ‘குசேலன்’, ’பரதேசி’, பாரதிராஜாவின் ’அன்னக்கொடி’, விஜய்யின் ‘ தலைவா’ படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். மேலும், ‘மதயானைக்கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் புரொமோஷன் பெற்றிருக்கிறார்.
நாங்கள் காதலர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என வலம் வந்தவர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார் - பின்னணிப் பாடகி சைந்தவி, ஜோடி!.

இவர்களின் திருமணம் வருகிற 27 ஆம் தேதி வியாழக்கிழமை, சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரிலுள்ள வள்ளியம்மை ஹாலில் காலை 9 மணிக்கு மேல் 10.25 க்குள் திருமணமும், மாலை 6.30 முதல் வரவேற்பும் நடைபெற இருக்கிறது தமிழக முதலமைச்சர் உட்பட முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள், சினிமா பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வரும், ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி ஜோடி பத்திரிகையாளர்களை சந்தித்தும் திருமண அழைப்பிதழ் வழங்கி, குடும்பத்துடன் வந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொண்டனர்.

அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, "நானும், சைந்தவியும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே, அதாவது கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதல் பற்றி இருவர் வீட்டிலும சொன்னபோது, பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்தனர். இருவீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;