சிரிக்க வைப்பவர்களுக்கு நல்லது நடக்கும்! - விஷால்

சிரிக்க வைப்பவர்களுக்கு நல்லது நடக்கும்!  - விஷால்

செய்திகள் 25-Jun-2013 10:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஷால் பேசும்போது,

''பட்டத்து யானை முழு நீள நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம். ஆனாலும் பல படங்களில் பணியாற்றியது போல் சிறப்பாக நடித்துள்ளார். பூபதி பாண்டியனின் தனித்துவமே நகைச்சுவை உணர்வுதான். படப்பிடிப்பிலும் அது வெளிப்படும். மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கு என்றுமே நல்லது தான் நடக்கும்.

ஒரு நாள் அவரை நலம் விசாரிக்க சென்றபோது ஒரு கதையை சொன்னார். அது 'அடேங்கப்பா ஆறு பேர்' என்ற கதை. முதல் பாதியை கேட்டபோதே எனக்கு பிடித்துவிட்டது. எழுந்து நின்று கைதட்டி, இந்த கதையை செய்வோம் என்று சொன்னேன். அதுதான் ‘பட்டத்து யானை’. படத்தில் நகைச்சுவை மட்டுமல்ல ஆழமான காட்சிகளும் உண்டு. படம் அனைவரையும் திருப்திப் படுத்தும் வகையில் இருக்கும்.

கதாநாயகன் கதாநாயகிக்கிடையே உள்ள கெமிஸ்டிரி நன்றாக இருந்தால் படம் நன்றாக வரும் என்கிறார்கள். ஆனால், கதாநாயகனுக்கும்- இயக்குநருக்கும் இடையே கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தாலும் படம் நன்றாக அமையும். இந்த படத்தில் எனக்கும், இயக்குநர் பூபதி பாண்டியனுக்கும் இடையே கெமிஸ்டிரி நன்றாக இருந்தது'' என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;