ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்களின் இருவர் ஒன்றானால்?

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்களின் இருவர் ஒன்றானால்?

செய்திகள் 25-Jun-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல இயக்குனர் ஏ. ஆர்.முருகதாசிடம் ‘ தீனா’ படம் முதல் ‘கஜினி’ வரை இணை இயக்குநராகவும், மேலாளராகவும் பணிபுரிந்தவர் ஏ.எம். சம்பத்குமார். இவர், ‘ரமணா ஆர்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். இயக்குனராகாமல் தயாரிப்பாளராக காரணம் கதை என்கிறார். .இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு முருகதாசின் இன்னொரு துணை இயக்குநரான அன்பு.ஜி என்பவரை இயக்குநராக அறிமுகம் செய்கிறார்.

ஒரு இயக்குனரிடம் இருந்து வந்த இருவர் ஒரே படத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் களம் இறங்குகின்றனர். ஏ.எம்.சம்பத்குமார் தான் இயக்குவதை தள்ளி வைத்து விட்டு, அன்பு.ஜி-யின் கதையை கேட்ட மாத்திரத்திலேயே அதை தானே தயாரிப்பது என முடிவு செய்து படப்பிடிப்பையும் முடித்து விட்டார். முருகதாசின் உதவியாளர்கள் இருவர் இணைந்து உருவாக்கும் இந்த படத்திற்கு பொருத்தமாக, ‘இருவர் ஒன்றானால்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

காதலை மையப்படுத்தும் கதை என்பதால் கல்லூரி மாணவர்களையே தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இதில் இந்துஸ்தான் கல்லூரி மாணவரான பி.ஆர். பிரபு நாயகனாக நடிக்க, விஸ்காம் ஸ்டூடன்டான மாலினி, மாடலான தீக்ஷிதா என இருவர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். வேட்டைக்காரன்’ படத்தில் 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது...' என்ற பாடலை பாடிய குரு கிருஷ்ணா இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;