‘லட்டு’வுக்கு அடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

‘லட்டு’வுக்கு அடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

செய்திகள் 24-Jun-2013 12:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர், மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஜீவாவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநாத் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் நண்பர்களாக சந்தானம், பிரேம்ஜி ஆகியோருடன் இன்னொருவரும் வருவார். அவர் இந்த ஸ்ரீநாத் தான். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;