படப்பிடிப்பில், தந்தைக்கு வசனம் சொல்லி கொடுக்கும் மகன்!

படப்பிடிப்பில், தந்தைக்கு வசனம் சொல்லி கொடுக்கும் மகன்!

செய்திகள் 24-Jun-2013 12:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் ‘பர்ஃபெக்‌ஷன் ஆர்டிஸ்ட்’ என்று சொல்லப்படுபவர் அமீர் கான். இவரை தொடர்ந்து இவரது மகன் ஜுனைத் கானும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஆனால் தந்தை வழியில் நடிகராக அல்ல, இயக்குனராக! பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் படம் ‘பீ.கே’. இந்த படத்தில் அமீர்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஷகா சர்மா நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வர, படத்தில் ராஜ்குமார் ஹிரானியுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் ஜுனைத் கான். இதன் படப்பிடிப்பில் தந்தை அமீர்கானுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களை சொல்லி கொடுத்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஜுனைத் கானை பார்த்து எல்லோரும் ‘பாலிவுட்டின் நாளைய பெரிய இயக்குனர்’ என்று பாராட்டுகிறார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;