கதறி அழுத நாயகி... காரணம் வில்லனா?

 கதறி அழுத நாயகி... காரணம் வில்லனா?

செய்திகள் 24-Jun-2013 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடிக்க காயத்ரி நாயகியாக நடிக்கும் படம் ‘பொன்மாலை பொழுது’ இந்தப் படத்தில் அடிக்கவேண்டிய சில காட்சிகளில் ஆதவ் கண்ணதாசனை பலமுறை நிஜமாகவே அடித்து விட்டாராம் வில்லன் நடிகர் அருள்தாஸ். நாயகி காயத்ரிக்கும் நிஜ அடி விழுந்ததாம்.

‘18 வயசு’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படங்களில் நடித்த காயத்ரி பேசும்போது... ‘படம் சீக்கிரம் முடிந்தது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் ஒரு விதத்தில் வருத்தம் அளித்ததாக’ கூறி தேம்பி நின்றவர், தொடர்ந்து பேச முடியாமல் இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டார். அவரின் அழுகைக்கு காரணம் வில்லன் நடிகர் அருள்தாஸா? இல்லை படத்தின் கதாநாயகன் ஆதவ்வா? என்ற கேள்வி எழுந்தபோது, ‘‘காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே அடித்துவிட்டேன்! படம் பார்த்தபிறகு அதன் ரிசல்ட் சந்தோஷமாக உள்ளது!’’ என்றார் வில்லன் அருள்தாஸ். ‘‘நடிப்பவர்களை இப்படி அடிக்கலாமா?’’ என்று கேட்டபோது ‘‘காட்சிக்கு தேவை என்றால் அடிக்கலாம்’’ என்றார் கொஞ்சமும் யோசிக்காமல்.

இப்படத்தை வாங்கி வெளியிடும் டாக்டர்.வி.ராமதாஸ் பேசியபோது, ‘‘ஹரிதாஸ் படம் ஆட்டிஸம் பற்றியது. இருபது வருடம் கழித்தும் பெயர் சொல்லும் படமாக இந்த ‘பொன்மாலை பொழுது’ இருக்கும். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’ போன்று காதலுக்காக பேசப்படும் படமாக இருக்கும். இப்படத்தை 3 முறை பார்த்தேன்... அருமையாக இருக்கிறது. இதில் நடித்த ஆதவ், காயத்ரிக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதுதான் அவர்களுடைய நடிப்புக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;