என்னோட ரோல் மாடல் தனுஷ்… ஆனா நான் ‘தல’யோட ரசிகன்!

என்னோட ரோல் மாடல் தனுஷ்… ஆனா நான் ‘தல’யோட ரசிகன்!

செய்திகள் 24-Jun-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஹரியரின் உதவியாளர் கே.ஜீ.வீரமணி இயக்கும் படம் ‘திறப்பு விழா’. இந்த படத்தில் ஜெய ஆனந்த் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தியேட்டர் லாப் கூத்துப்பட்டறையில் பயின்றவர். மூன்று வருடங்களில் 13 நாடகங்களில் நடித்திருக்கும் இவர், நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு நாடகத்தில் ஒரே நேரத்தில் மூன்று வேடங்களில் தோன்றி நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

‘திறப்பு விழா’ படத்தில் நடித்து வருவது குறித்து ஜெய ஆனந்த் கூறும்போது, ‘’திறப்பு விழா’ படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் என்னிடம் ‘நீங்கள் விஷாலின் தம்பியா? சாயலில் அவரை போலவே இருக்கிறீர்கள்’ என்று சொன்னார்கள். பெரிய நடிகரான விஷால் மாதிரி நான் இருப்பதாக சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் சினிமாவுக்கு வருவதற்கு எனக்கு ரோல் மாடலாக இருந்தவர் நடிகர் தனுஷ் தான். ஆனால நான் ‘தல’ அஜிதோட ரசிகன்’’ என்று அதிரடியாக ஒரு போடு போட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;