ஒரு மோதல் ஒரு காதல்

ஒரு மோதல் ஒரு காதல்

செய்திகள் 22-Jun-2013 5:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போல, ”ஒரு மோதல் ஒரு காதல்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது, நகைச்சுவை கலந்த, குடும்ப பாங்கான காதல் கதையாம். இந்த படத்தை ‘கந்தன் கியர் அப் என்டர்டெயின்மென்ட்’ என்ற புதிய நிறுவனம் சார்பில் ரமணன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ‘சூர்யநகரம்’, ‘நாங்க’ ஆகிய படங்களில் நடித்த ஆர்.விவேக் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், ‘டேம் 999’ படத்தில் நடித்தவருமான மேகா பர்மன் நடிக்கிறார்.

இந்த படத்தை, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, ஐந்து வருட காலம் விளம்பரத்துறையிலும் பணியாற்றி அனுபவம் பெற்ற கீர்த்தி குமார் இயக்க, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த யுகா ஒளிப்பதிவு செய்கிறார். தயானந்த் பிறைசூடன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VSOP படத்தின் ‘நான் ரொம்ப பிஸி...’ - வீடியோ பாடல்


;