‘தலைவா’வைத் தொடர்ந்து அஜித் படமும்!

 ‘தலைவா’வைத் தொடர்ந்து அஜித் படமும்!

செய்திகள் 22-Jun-2013 4:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், அஜித் அடுத்து, ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ‘வினாயகம் பிரதர்ஸ்’ என்ற படத்தில் நடிக்க துவங்கி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிஸியாக இயங்கி வருகின்றனர் படக் குழுவினர். இந்நிலையில் அஜித்தின் 53-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் ‘தலைவா’வை தொடர்ந்து அஜித் படத்தையும் ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;