‘தலைவா’ விழாவில் பரபரப்பு கிளப்பிய சத்யராஜ்!

‘தலைவா’ விழாவில் பரபரப்பு கிளப்பிய சத்யராஜ்!

செய்திகள் 22-Jun-2013 12:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தலைவா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் விஜய், சத்யராஜ், சுரேஷ், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், நடிகைகள் அமலா பால், ரேகா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சி, ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உட்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்தவிழாவின் ஆரம்பத்தில் ஆபிரகாம் லிங்கனில் ஆரம்பித்து நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, சேகுவாரா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற உலக தலைவர்களின் படங்களையெல்லாம் லேசர் விளக்கில் ஒளிர வைத்தார்கள். இறுதியாக, அந்தத்திரை இரண்டாக விலகி, அதன் உள்ளிலிருந்து இளையதளபதி விஜய் வரவும் மொத்த அரங்மும் ஆர்ப்பறித்து கைதட்டியது.

அதன்பின்னர் ஒவ்வொருவராக வந்து பேசத் தொடங்கினார்கள். முதலில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேசினார்...

‘‘இந்தப் படத்தோட கதை என்கிட்ட வந்ததும் அதை எஸ்.ஏ.சி சார்கிட்டதான் நான் முதல்ல சொன்னேன். அவரு நீங்க விஜய்கிட்டயே சொல்லுங்கன்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் விஜய் சார்கிட்ட நிறைய முறை போன்ல பேசினேன். ரொம்ப யோசனைக்கப்புறம் அவரு வீட்டுக்கு வரச்சொன்னாரு. ‘ரொம்பவும் தொல்லை பண்ணிட்டோம். அதுனால வேணாம் சொல்றதுக்குதான்’ நேர்ல கூப்பிடுறாருன்னு நான்கூட முதல்ல நினைச்சேன். ஆனா, அங்கே போனதும் எனக்கு சர்ப்ரைஸ். கண்டிப்பா பண்ணலாம் சொல்லிட்டார். அப்படி உருவானதுதான் இந்த ‘தலைவா’’’ என்றாவர்,

‘‘இந்தப் படத்தோட ஷூட்டிங்கிற்காக நிறைய பேர் விஜய் சார் கூட ஆஸ்திரேலியா போயிருந்தாங்க. அப்போ, அங்கே கொஞ்சம் பிரச்சனைனால, ஷூட்டிங்குக்கு பிராப்ளமா இருந்தது. அந்த சூழ்நிலைல விஜய் சார் எனக்கு உடனே போன் பண்ணி என்னை வரச்சொல்லி பிரச்சனை சரி பண்ணச் சொன்னார். தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்ச விஜய் சாரோட நல்ல மனசு யாருக்கு வரும். விஜய் சார் பேசினா அதுல உண்மையும் நேர்மையும் மட்டுமே இருக்கும். ரொம்பவும் தங்கமான மனிதர்’’ என அடுக்கிக்கொண்டே போக, கூச்சத்தில் நெளிந்தார் இளையதளபதி.

பின்னர் சத்யராஜ் வந்துபேசும்போது, ‘‘இந்தத் தலைவர்கள் வரிசையில் தந்தை பெரியார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணன் பிரபாகரன் படத்தையும் கூட வைத்திருக்கலாம்’’ என்றதும், அதுவரை கரகோஷத்துடன் நடந்துகொண்டிருந்த விழா, ஒரு கணம் ஸ்தம்பித்து அமைதியானது.

‘‘விஜய்யோட ‘தலைவா’ படத்தைப் பார்க்க உங்களை மாதிரியே நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன்’’ என்றார் விஜய்யின் தந்தை தந்தை எஸ்.ஏ.சி.

‘‘இயக்குனர் விஜய்கூட ஒர்க் பணணது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். ரொம்ப நல்ல க்ரியேட்டர் அவர். முழுப்படமும் நான் பார்த்துட்டேன். ரொம்பவும் சூப்பரா இருக்கு’’ என்றார் விஜய். அரசியல் பற்றி ஏதாவது வாய் திறப்பார் அதை வைத்து ஏதாவது எழுதித்தள்ளலாம் எனக் காத்துக் கொண்டிருந்த பல நிருபர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ‘தலைவா’ படத்தின் இசைத்தட்டை இளையதளபதி விஜய் வெளியிட, அதை தமிழ்சினிமாவின் முதல் பிஆர்ஓவும், பிஆர்ஓ சங்கத்தைத் தோற்றுவித்தவருமான மூத்த பத்திரிகையாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;