‘‘அஜித் மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை!’’ - கேமராமேன் வெற்றி

‘‘அஜித் மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை!’’ - கேமராமேன் வெற்றி

செய்திகள் 22-Jun-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்துடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றி புகழ்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது இந்த லிஸ்டில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கேமராமேன் வெற்றியும் சேர்ந்திருக்கிறார்.

‘‘இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எனக்கு உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம். அஜித் மாதிரி ஒரு மிகப்பெரிய ஸ்டாரை படமாக்கும்போது நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால், அவர் என்னிடம் மிகச் சாதாரண மனிதன்போல் பழகி என்னை ஆசுவாசப்படுத்தினார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயர். சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் வந்துவிடும் அவருடைய நேரந்தவறாமை என்னை வியக்க வைக்கிறது.

அதேபோல், ஸ்பாட்டுக்கு வந்ததும் லைட்பாய் உள்பட அனைவரின் அருகிலும் வந்து நலம் விசாரித்துச் செல்வார். சாப்பிடும் நேரத்தில் மட்டுமே கேரவனுக்குள் இருப்பார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லையென்றாலும், செட்டிலேயே அமர்ந்து ஷூட்டிங்கை ரசித்துக் கொண்டிருப்பார்.

உடன் நடிப்பவர்களின் குடும்பங்களைப் பற்றி தினமும் அக்கறையாக விசாரிப்பார். இதைப்போல வேறு எந்த நடிகராவது நடந்துகொள்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை. உண்மையில், அஜித் எனக்கு வானத்திலிருந்து பூமிக்கு வந்தவர்போல்தான் காட்சி தருகிறார்.

அவர் கேமரா முன் வந்து நின்றதும், ஏதோ மேஜிக் நிகழ்வதுபோலத்தான் எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை அஜித் இந்த உலகத்திலேயே மிகவும் அற்புதமான குணம் கொண்டவர்.’’ என அஜித்தைப் பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;