விஜய் பிறந்த நாள்…. பட்டையை கிளப்பும் ‘தலைவா’ ட்ரெய்லர்!

விஜய் பிறந்த நாள்…. பட்டையை கிளப்பும்  ‘தலைவா’ ட்ரெய்லர்!

செய்திகள் 22-Jun-2013 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான ‘இளைய தளபதி’ விஜய்க்கு இன்று பிறந்த நாள்! ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலதிட்ட உதவிகளை செய்துகொண்டு இந்த வருட பிறந்த நாளை கொண்டாட இருந்தார் விஜய். ஆனால் என்னவோ ‘திருஷ்டி’ பட்டதுபோல் அந்த விழாவை நடத்த முடியாமல் போய்விட்டது.

ஆனால் என்ன? விஜய்யின் ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் ட்ரீட்டாக ‘தலைவா’ படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறதே! ‘தலைவா’ ட்ரெய்லர் வெளியாகிய 12 மணி நேரத்தில் இரண்டு லடச்த்திற்கும் மேற்பட்டவர்கள் அதை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாடல்களும ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தூள் கிளப்பிக் கொண்டிருக்க, ரசிகர்களின் வாழ்த்துக்களோடு பிறந்த நாள் கொண்டாடி வரும் ‘இளையதளபதி’க்கு ’டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;