ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் என்னமோ இருக்கு! - இயக்குனர் அட்லீ

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் என்னமோ இருக்கு! - இயக்குனர் அட்லீ

செய்திகள் 22-Jun-2013 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் கல்யாணம்’ என ஊரெல்லாம் பரப்பி, ‘ராஜா ராணி’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்தார் இயக்குனர் அட்லீ. புரமோஷன் நல்லபடியா நடந்தாலும், இயக்குனர் அட்லீயின் இந்த விளம்பர யுக்தி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது இந்த விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அட்லீயே மனம் திறந்து பேசி இருக்கிறார்.

‘‘இந்தப் படத்தின் கதையைப் பற்றி வந்த சர்ச்சைகள் என்னை காயப்படுத்தினாலும், என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நல்ல தரமான படம் கொடுப்பதே இதற்கான மருந்து என உழைக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல், என்னுடைய விளம்பர யுக்திக்கு ஆர்யாவும் நயன்தாராவும் கொடுத்த ஒத்துழைப்பு சூப்பர்! திருமணத்திற்குப் பிறகு நடக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதே இப்படம். இப்படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்யாவும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதாகட்டும், உதவி செய்து கொள்வதாகட்டும், இல்லையென்றால் செல்லமாக அழைத்துக் கொள்வதாகட்டும்... நிச்சயம் அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு கண்டிப்பாக இருக்கிறது!’’ என இயக்குனர் அட்லீ ஆர்யா, நயன்தாராவுக்கு இடையே இருக்கும் உறவை வெளிப்பாடையாகச் சொல்லி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

இது ஏதோ, ‘மோக்கியா’ சந்தானத்துகிட்ட ஐடியா வாங்கி, ஆர்யாவே சொல்லச் சொன்னது மாதிரி இருக்கே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;