‘கும்கி’யை தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’

 ‘கும்கி’யை தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’

செய்திகள் 21-Jun-2013 3:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிகொண்டிருக்கும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை, லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம். இந்த படத்தில் விக்ரம் பிரபு, சுரபி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் கணேஷ் வெங்கட் ராமன், வம்சி, ஷர்மிலி ஆகியோரும் நடிக்க, ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் சரவணன் இயக்கி வருகிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கியிருக்க, ‘எங்கேயும் எப்போதும்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ போன்ற படங்களுக்கு இசை அமைத்த சத்யா இசை அமைத்து வருகிறார். இந்த படம் குறித்து ‘யுடிவி’ நிறுவனத்தின் தென்னிந்திய வர்த்தகப் பிரிவு அதிகாரியான தனஞ்சயன் கூறும்போது,

‘’யுடிவி நிறுவனம், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்து ‘வழக்கு எண் 18/9’ மற்றும் ‘வேட்டை’ படங்களை தயாரித்து வெளியிட்டோம். இந்த வெற்றிப் படங்களை தொடர்ந்து யுடிவி நிறுவனம் மீண்டும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘இவன் வேற மாதிரி’ படத்தை தயாரித்து வருகிறது. ‘கும்கி’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படம் ரொமான்டிக் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்குப் பிறகு எங்களது அடுத்த வெளியீடாக வரவிருக்கும் இப்படமும் பெரிய வெற்றியை பெறும்’’ என்றார்.

‘இவன் வேற மாதிரி’ போல படமும் வேற மாதிரி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;