பாலிவுட்டை கலக்க வரும் நஷா!

பாலிவுட்டை கலக்க வரும் நஷா!

செய்திகள் 21-Jun-2013 3:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் மேட்டர் ‘நஷா’ என்ற படமும், இதில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் பூனம் பாண்டே என்ற நடிகையும்தான்!. அமித் சக்சேனா இயக்கியுள்ள ‘ நஷா’வின டீஸரும், ட்ரெய்லரும் வெளியாகி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படம் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது. இளைஞர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை வினியோகம் செய்ய, வினியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். இதற்கு காரணம் பூனம் பாண்டேயின் தாராளமயமான கவர்ச்சி காட்சிகள்தான்!

இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் அமித் சக்சேனா குறும்போது, ‘‘நஷா’ வெறும் கவர்ச்சி படமல்ல, இதில் மனதை கவரும்படியான நல்ல ஒரு கதையும் இருக்கிறது. விரைவில் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறேன், அதிலும் பூனம் பாண்டே தான் ஹீரோயின்’’ என்று அதிரடியாய் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இது இரண்டாம் பாகங்களின் சீஸன் போலும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;