ஹிந்திக்கு போகும் காஞ்சனா!

ஹிந்திக்கு போகும் காஞ்சனா!

செய்திகள் 21-Jun-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், சரத்குமார் நடிப்பில் வெளிவந்து பட்டைய கிளப்பிய திகில் படம் 'காஞ்சனா.' ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்த இப்படம் தெலுங்கிலும் 'காஞ்சனா' என்ற பெயரிலேயே வெளியாகி அங்கும் வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ‘காஞ்சனா’ தற்போது ஹிந்தியிலும் ரீ-மேக் ஆக, இதனை பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

ஹிந்தி ‘காஞ்சனா’ படத்தை லாரன்ஸே இயக்க, தான் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் லாரன்ஸ். சஞ்சய் லீலா பன்சாலி ஏற்கெனவே சில தமிழ் படங்களை ரீ-மேக் செய்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;