சமந்தா இப்போ யாருக்கு ஜோடி தெரியுமா?

சமந்தா இப்போ யாருக்கு ஜோடி தெரியுமா?

செய்திகள் 21-Jun-2013 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் ரவுண்டு கட்டி நடித்து வந்தாலும், தமிழைப் பொறுத்தவரை சமந்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே சங்கடமான காலம்தான். ‘பாணா காத்தாடி’, ‘மாஸ்கோவின் காவேரி’ என தமிழில் தனது அறிமுகப்படங்கள் படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லையென்றாலும், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து பெரிதாக அனைவரையும் இம்ப்ரஸ் செய்தார் சமந்தா.

அதன்பின்பு நடந்ததுதான் சோகத்திலும் சோகம்! மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திற்கு முதலில் சமந்தாவைதான் ‘புக்’ செய்தார்கள். என்ன காரணமோ அதிலிருந்து கழட்டிவிடப்பட்டார் (நல்லவேளை என பிறகு நினைத்திருப்பார்!). ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கும் முதலில் சமந்தாவைதான் அணுகினார்கள். பின்னர், சத்தமில்லாமல் எமி ஜாக்சனை வைத்து ஷூட்டிங்கை ஆரம்பித்தார் ஷங்கர். போதாக்குறைக்கு சமந்தாவின் தோல் அலர்ஜி ஒரு பக்கம் அவரைப் பாடாய்ப்படுத்தியது.

இந்த நேரத்தில்தான் சமந்தாவுக்கு மிகவும் ஆறுதலாக நடந்த ஒரு விஷயம்... தனது ஆஸ்தான இயக்குனர் கௌதம் மேனனின் ‘நீதானே என் பொன்வசந்தம்’ பட வாய்ப்பு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாயகியாக ஒப்பந்தமானார். ஆனால், இந்தப் படமும் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை.

ஆனால், தான் எதிர்பார்த்திராத ‘நான் ஈ’ படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்த சமந்தாவிற்கு தற்போதுதான் சுக்ரதிசை ஆரம்பித்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்திற்கு சமந்தாவைதான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இந்த சந்தோஷத்தோடு மேலும் ஒரு ‘பம்பர்’ பரிசாக, இளைய தளபதி விஜய்யுடனும் ஜோடி போட இருக்கிறார் சமந்தா.

ஆம்... ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய் & ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் தளபதிக்கு ஜோடி சமந்தாதானாம். தற்போது ‘தலைவா’ போஸ்ட் புரொடக்ஷனிலும், ‘ஜில்லா’ ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கும் விஜய் இந்தப்பட வேலைகள் முடிந்ததும் முருகதாஸ் படத்தில் பரபரப்பாக இயங்க இருக்கிறாராம். முதல்கட்டமாக ஹீரோயினாக சமந்தாவை ஒப்பந்தம் செய்த கையோடு இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், செட்டுக்கு லால்குடி இளையராஜா என தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வுசெய்துவிட்டார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;