சூப்பர் ஸ்டார் மருமகனுக்கு அமீர்கானின் பாராட்டு!

சூப்பர் ஸ்டார் மருமகனுக்கு அமீர்கானின் பாராட்டு!

செய்திகள் 21-Jun-2013 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் நடித்திருக்கும் முதல் ஹிந்தி படமான ‘ரான்ஜனா’ இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பல பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த நடிகர் ரன்பீர் கபூர், படத்தில் தனுஷின் அபாரமான நடிப்பை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார். பாலிவுட்டின் ‘பெர்ஃபெக்ட் ஆர்ட்டிஸ்ட்’ ஆன அமீர்கானோ, தனுஷின் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸை பார்த்து, மனதார பாராட்டியிருப்பதோடு, தனுஷுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பதற்கான பாராட்டு இல்லை, உண்மையிலேயே தனுஷின் தனித் திறமையான நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். தொடர்ந்து பாலிவுட்டிலும் கலக்குங்க தனுஷ். ‘ரான்ஜனா’ தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வருகின்ற 28—ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;