இயக்குனராகும் தனுஷ்!

இயக்குனராகும் தனுஷ்!

செய்திகள் 20-Jun-2013 1:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மரியான்’, ‘ரான்ஜனா’, ‘நையாண்டி’, கே.வி.ஆனந்த் இயக்கும் படம் என நடிப்பில் படு பிஸியாக இருப்பவர் தனுஷ். இது மட்டுமில்லாமல் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு, தயாரிப்பாளர், நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர் என சினிமாவின் பல துறைகளில் ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்தி வரும் தனுஷ், அடுத்து இயக்குனர் அவதாரமும் எடுக்க இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தனுஷ், ‘’அப்பா கஸ்தூரி ராஜாவும், அண்ணன் செல்வராகவனும் இயக்குனர்கள். அவர்களை பார்த்து வளர்ந்த எனக்கும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை வருவதில் தப்பில்லையே? ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாகவே என் மனதில் இருந்து வந்தது. அதை அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த இருக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

அப்ப, தனுஷை ‘இன்னொரு சகலகலா வல்லவர்’ என்று கூறலாம் போல!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;