’ஜெயம்’ ரவியுடன் நயன்தாரா!

’ஜெயம்’ ரவியுடன் நயன்தாரா!

செய்திகள் 20-Jun-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி கூட்டணியில் கடைசியாக வெளிவந்த படம் ‘தில்லாலங்கடி’. இந்த படத்திற்கு பிறகு ‘எங்கேயும் காதல்’, ‘ஆதி பகவன்’ ஆகிய படங்களில் நடித்த ‘ஜெயம்’ ரவி தற்போது ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்து வருகிறார். ‘தில்லாலங்கடி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய ராஜா அந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல், தம்பி ரவியை வைத்து இயக்குவதற்காக ஒரு கதையை உருவாக்கி வந்தார்.

அண்ணன் உருவாக்கிய கதை தம்பிக்கு பிடித்துபோக, ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்து முடித்ததும் அண்ணன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ‘ஜெயம்’ ரவி. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்! தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் நயன்தாரா தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் மட்டும்தான் நடிக்கிறார். ‘ஜெயம்’ ரவியுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;