மணிரத்னத்தின் சினிமா குடோனில் ‘தீ’யா?

மணிரத்னத்தின் சினிமா குடோனில் ‘தீ’யா?

செய்திகள் 20-Jun-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ள ஜெயின் கோயில் அருகே வெளிப்புற படப்பிடிப்புக்கு தேவையான பொருட்கள் பாதுகாக்கப்படும் திறந்த வெளி குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்களால் உடனடியாக தீயை கட்டுக்குள கொண்டு வர முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் வெளிப்புற படப்பிடிப்புக்கு தேவையான பிரம்மாண்ட தூண்கள், வளைவுகள், பிளைவுட் பலகைகள், இரும்பு தகடுகள் என மூன்று லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்ற நிலையில், தீ விபத்துக்கு இரையான இந்த குடோன் இயக்குனர் மணிரத்னத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;